பாதுகாப்பான பல்கலைக்கழக சூழலை உருவாக்குவோம்
 
  எமது வாழ்க்கையில் எம்மில் பலர் சிலவகையான அச்சுறுத்தலையோ அல்லது துன்புறுத்தல்களையோ பல்கலைக்கழகவளாகத்தில் ஏதாவதொரு தருணத்தில் அனுபவித்துள்ளோம். இத்தகைய அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் பல்வேறுபட்ட வடிவங்களில் காணப்படுகின்றன. பொதுவாக பகிடிவதை, பாலியல்துன்புறுத்தல்கள், கொடுமைப்படுத்தல்கள் பாலியல் தொடர்பிலான வன்முறைகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்களாக இவை காணப்படுகின்றன.  
  இத்தகைய சந்தர்ப்பங்கள் பொதுவாகப் பல்கலைக்கழக நாட்களின் மறக்க முடியாத நினைகளாக மலரும் தன்மையானவையாக, வேடிக்கைமிக்கதாக மனதினைப் பூரணப்படுத்தும் நினைவுகளாக அல்லாமல் பயப்படுத்துகின்ற வேதனையளிக்கும் மிரட்டல்களாக மாற்றமடைகின்றன. எம்மில்பலர் (மாணவர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள், கல்விசாராஉத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள்) அதிகமான எமது நேரத்தினைப் பல்கலைக்கழகத்தில் செலவிடுகின்றோம். பல்கலைக்கழகமானது பாதுகாப்பானதாகக் காணப்படல் வேண்டும் என்பதனை உறுதிசெய்யும் பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதேவேளையில், பாதுகாப்பினை உணர்ந்துகொள்ள, உறுதிசெய்ய பல்வேறுவிதமான முன்னெடுப்புக்களை முன்னெடுப்பது முக்கியமானதாகும். பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின் புதிய முயற்சி 'இயங்கலை முறைப்பாட்டுப் பொறிமுறை"ஆகும். இது பல்கலைக்கழக சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரும் பகிடிவதை, அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் இவைபோன்ற எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதும் முறைப்பாட்டினைப்பதிவு செய்ய உதவியாக விளங்குகின்றது. தாக்கல் செய்யப்படும் அனைத்து முறைப்பாடுகளும் விசாரணைக்குட்படுத்தப்படும்.  
 
  எவ்வாறு 'இயங்கலை முறைப்பாட்டுப் பொறிமுறை' தொழிற்படுகின்றது?  
 
  பல்கலைக்கழகத்தில் எந்தவொரு உறுப்பினரும் அதாவது வன்முறையின் எந்தவடிவத்தினாலும் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படின் அல்லது பகிடிவதையினை அவதானித்தவர்களாக சம்பவத்தினை அறிந்தவர்களாகக் காணப்படின் அவர்கள் முறைப்பாடு செய்யமுடியும். இது பகிடிவதை, பாலியல்துன்புறுத்தல்கள், கொடுமைப்படுத்தல்கள் பாலியல் தொடர்பிலான வன்முறைகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் போன்றவற்றினை உள்ளடக்குகின்றது.
 
  முறைப்பாடுதாக்கல் செய்யப்பட்டதும், அதற்கான பொறுப்பதிகாரிகளுக்கு (அதாவது உபவேந்தர், துணைஉபவேந்தர், மாணவ ஆலோசகர்கள் போன்றவர்களுக்கு) 24 மணிநேரத்தினுள் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடார்பில் தொரியப்படுத்தப்படும். மேலும் முறைப்பாடு தொடார்பில் விசாரணையினை மேற்கொள்ளுமாறும் அவர்கள் வேண்டப்படுவர். பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள முறையீடுகள் தொடர்பிலான நடைமுறைகளிலிருந்து இயங்கலை முறைப்பாட்டுப்
 
 
  பொறிமுறையானது எவ்வாறு வேறுபடுகின்றது?  
 
  முறைப்பாட்டினை மேற்கொள்ளுவது மிகவும் இலகுவானதாகக் காணப்படுகின்றது. நீங்கள் இலகுவாக இயங்கலைக்கு (Online) நுழைய வேண்டும். அதன்பிற்பாடு உங்களது முறைப்பாட்டினை பகிடிவதை முறைப்பாட்டு வாயிலில் பதிவுசெய்து கொள்ளமுடியும். http://www.ugc.ac.lk/rag இதனை நீங்கள் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் மேற்கொள்ளலாம்.
  உமது முறைப்பாடானது உமது பல்கலைக்கழகத்திற்கு 24 மணிநேரத்தினுள் முன்வைக்கப்படும். மேலும் அது பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்படும்.
  குறிப்பிட்ட காலப்பகுதியினுள் அனைத்து முறைப்பாடுகளும் விசாரணைக்குட்படுத்தப்படும்: அதாவது முறைப்பாடு மேற்கொண்டதும், செயன்முறையானது முறைப்பாடு செய்யும் முறைப்பாட்டாளர் மற்றும் குற்றம் புரிந்தவர் அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்(கள்) போன்ற தரப்பினார்களுக்கு அதிகளவான இன்னல்களை வழங்கி நீண்டகாலத்திற்கு நீடித்துகொண்டுச் செல்லப்படமாட்டாது.
 
 
  எத்தகைய முறைப்பாடுகள் இதனுள் முறையீடு செய்யப்படலாம்?  
 
நீங்கள் பின்வரும் குற்றம் ஏதாவது ஒன்றிற்கு முகங்கொடுத்திருப்பின் 'இயங்கலை (Online) முறைப்பாட்டுப் பொறிமுறையினைப் பயன்படுத்தலாம்.
அனைத்து விதமான பகிடிவதைகள் (உடலியல், பாலியல் மற்றும் உளவியல் தொடார்பிலானவை)
பாலியல் துன்புறுத்தல்கள்
பாலியல் தொடார்பிலான வன்முறைகள்
அச்சுறுத்தல், மிரட்டல்கள்
கொடுமைப்படுத்தல்கள்
துன்புறுத்தல்கள்
 
 
  யாரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்?  
  பல்கலைக்கழகத்தில் அனைத்து உறுப்பினரும் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் (மாணவர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள்).  
 
  முறைப்பாடுகளுக்கு பதில்கூறும் பொறுப்பானவர்கள் யார்?  
 
முறைப்பாடுப்பாட்டின் தன்மையினைப் பொறுத்து இது மாறுபடலாம். ஆனால் பொதுவாக பின்வருவோர் முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனஉறுதி செய்ய பொறுப்புவாய்ந்தவார்களாகக் காணப்படுகின்றனர்.
உபவேந்தர்
துணை உபவேந்தர்
சிரேஷ்ட மாணவ ஆலோசகர்
பீடாதிபதிகள்
துறைத் தலைவர்கள்
 
 
  பிழையான முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்படின் இடம்பெறுவது என்ன?  
  தாக்கல் செய்யப்படும் அனைத்து முறைப்பாடுகளும் விசாரணைக்குட்படுத்தப்படும். அத்துடன் திரும்பப் பெறமுடியாதவைகளாக இவை காணப்படும். எவ்வாறெனினும், முறைப்பாடுகள் தவறானவைகளாகக் காணப்படின் அல்லது தீங்கிழைப்பவைகளாகக் காணப்படின் அத்தகைய முறைப்பாடுகளை மேற்கொண்டவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர்.