பாதுகாப்பான பல்கலைக்கழகச் சூழலை செயற்படுத்தல்

 
  நம்மில் பலர் நம் வாழ்வின் ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகத்தில் ஒரு விதமான அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தலை அனுபவித்து இருக்கின்றோம். இத்தகைய அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் பல்வேறு வடிவங்களை எடுக்கலாம்: அதாவது பகிடிவதை, பாலியல் துன்புறுத்தல், கொடுமைப்படுத்தல், பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்செயல், அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல் போன்றனவாகும். இத்தகையை சம்பவங்கள் பல வேளைகளில் நிறைவானதும் மகிழ்ச்சியுமான மறக்க முடியாத பல்கலைக்கழக வாழ்க்கையினை பயமுறுத்துவதாகவும் துன்பகரமானதாகவும் மாற்றியுள்ளன.  
  நம்மில் பலர் (மாணவர்கள், கல்வியாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள்) அதிகமான நேரத்தினை பல்கலைக்கழகத்தில் செலவிடுவதனால் அப் பல்கலைக்கழகம் நம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருப்பதனை உறுதி செய்கின்ற பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.  
  இணையவழிப் புகார்கள் பொறிமுறையானது பகிடிவதை, பாலியல் மற்றும் பால்நிலை சார்ந்த வன்செயல்கள் (SGBV) மிரட்டல், கொடுமைப்படுத்தல்கள் மற்றும் வன்முறையின் வேறெந்த வடிவங்கள் தொடர்பாகவும் பல்கலைக்கழக சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரும் புகார் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய முயற்சியாக இது காணப்படுகின்றது. பதிவு செய்யப்படுகின்ற அனைத்து புகார்களும் விசாரிக்கப்பட்டு இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவும் நிவாரணமும் வழங்கப்படும்.  
       
  இணையவழிப் புகார் பொறிமுறை எவ்வாறு செயற்படுகின்றது?  
 
  • பல்கலைக்கழகத்தின் எந்தவொரு உறுப்பினரும் வன்முறையின் எந்தவொரு வடிவத்தினாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பின்; புகாரினை செய்ய முடியும்.பகிடிவதை, கொடுமைப்படுத்தல் மற்றும் பாலியல் மற்றும் பால்நிலை சார்ந்த வன்முறைகளை இது உள்ளடக்குகின்றது.
  • சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்யப்படும் பட்சத்தில் (உப வேந்தர், மாணவர் ஆலோசகர்கள் போன்றவர்கள்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு புகார் தொடர்பான விசாரணை ஒன்றினை உடனடியாக தொடங்குவார்கள்.
  • புகாரினை மேற்கொண்ட நபருக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பதில் வழங்கப்படும்.
  • புகாரின் விளைவாக அவன்ஃஅவள் மேலும் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு புகாரினை மேற்கொண்ட நபருக்கு பல்கலைக்கழகத்தினால் பாதுகாப்பும் ஆதரவும் வழங்கப்படும்.
 
     
  பல்கலைக்கழகத்திலுள்ள புகார் நடைமுறைகளில் இருந்து இணையவழி புகார் பொறிமுறை எவ்வாறு வேறுபட்டுள்ளது?  
 
  • புகார் ஒன்றினை மேற்கொள்வது மிக எளிதாகும் - இணையத்திற்கு இலகுவாக சென்று உங்களுடைய புகாரினை பதிவுசெய்யலாம். இதனை பாதுகாப்பாகவும் தனியுரிமையுடனும் நீங்கள் செய்யலாம்.
  • நீங்கள் பொருத்தமான பதிலை பெற்றுக் கொள்வதனை உறுதிசெய்வதற்கு உங்களுடைய புகார் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்பட்டு அவதானிக்கப்படும்.
  • குறித்த ஒரு கால எல்லைக்குள் அனைத்து புகார்களும் விசாரிக்கப்படும்: அதாவது மக்கள் புகார்களை மேற்கொள்ளும்போது விசாரணைச் செயன்முறையானது நீண்டகாலத்திற்கு இழுத்துச் செல்லப்பட மாட்டாது, இது புகார் அளித்தவருக்கும் குற்றம் சுமத்தப்பட்டவர்ஃகுற்றம் சுமத்தப்பட்டவர்கள் இருவருக்கும் பெரும் சிக்கலினை ஏற்படுத்துகின்றது.
  • புகார் மேற்கொள்ளப்பட்ட தருணத்திலிருந்து புகாரினை மேற்கொண்டவருக்கு ஆதரவு கிடைக்கத் தொடங்கும். உளஆலோசனை, பாதுகாப்பு மற்றும் பாதுகாத்தல், மற்றும் கல்வி அல்லது பணியை தொடர்வதற்கான ஆதரவு போன்ற வடிவங்களில் ஆதரவு காணப்படும்.
     
  எந்த வகையான குறைகளை இணையத்தில் பதிவுசெய்யலாம்?
    பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றிற்குள் நீங்கள் உட்படுத்தப்பட்டிருப்பின் நீங்கள் இணைய பொறிமுறையைப் பயன்படுத்த முடியும்:
 
  • பகிடிவதையின் அனைத்து வடிவங்கள்
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் அல்லது பாலினம் சார்ந்த வன்செயல்
  • அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள்
  • கொடுமைப்படுத்தல்
  • துன்புறுத்தல்
     
  புகார்களை யார் மேற்கொள்ளலாம்?
   

பல்கலைக்கழக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்கள்: மாணவர்கள், கல்வியாளர்கள், கல்விசாரா மற்றும் நிர்வாக ஊழியர்கள்

     
  புகார்களுக்கு பொறுப்புக் கூறுகின்ற பொறுப்பானவர்கள் யார்?
    புகாரின் இயல்பினைப் பொறுத்து இது வேறுபடும், ஆனால் புகார்கள் விசாரிக்கப்படுவதனை உறுதிசெய்வதற்காக பொதுவாக பின்வருவோர் பொறுப்பானவர்களாக இருப்பார்கள்:
 
  • துணை வேந்தர்
  • சிரேஸ்ட மாணவ ஆலோசகர்கள்
  • பீடாதிபதிகள்
  • துறைத் தலைவர்கள்
  • பல்கலைக்கழக பாலின மையத்தின் பணியாள் ஆளணியினர்
     
  தவறான புகார்கள் மேற்கொள்ளப்பட்டால் இடம்பெறுவது என்ன?
    மேற்கொள்ளப்பட்ட அனைத்து புகார்களும் விசாரணை செய்யப்படுவதுடன் அவற்றை மீளப்பெற முடியாது. எவ்வாறாயினும் புகார்கள் தவறானவை அல்லது முரணானவை என கண்டறியப்பட்டால் அத்தகைய புகார்களை மேற்கொண்டவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர்.